எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான நில அபகரிப்பு வழக்கில்... ஆய்வாளர் பிரித்திவிராஜை கைது செய்தது சி.பி.சி.ஐ.டி போலீஸ்

0 654

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான 100 கோடி ரூபாய் நில அபகரிப்பு புகாரில், நிலத்தின்அசல் ஆவணம் தொலைந்ததாக, நான்டிரேசபிள் சர்டிபிகேட்  வழங்கிய சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்திவிராஜை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூரில் பணியாற்றி சென்னைக்கு மாறுதலான ஆய்வாளர் பிரித்திவிராஜிடம் ஆவணங்கள் தொலைந்ததாக எம்.ஆர்.விஜயபாஸ்கரின்ஆதரவாளர்கள் என்.டி.சி சான்றிதழைப் பெற்று, அதனை வெள்ளியணை சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து அசல் ஆவணங்களை பெற்றதாக தெரிகிறது.

நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் அசல் ஆவணம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, மேலக்கரூர் சார்பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி போலீசார் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக பிரித்திவிராஜை கூடுவாஞ்சேரியில் வைத்து கைது செய்தனர். ((GFX OUT))

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments