பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் ராஜிநாமா
பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் ராஜிநாமா செய்துள்ளார். அவரது ராஜிநாமா ஏற்றுக்கொண்ட அதிபர் இம்மானுவேல் மேக்ரான், புதிய அரசு பதவியேற்கும் வரை அவரை பிரதமர் பதவியில் நீடிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
577 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், எந்தக் கட்சிக்கும் அருதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இடதுசாரி கூட்டணியான நியூ பாப்புலர் ஃப்ரண்ட் 182 இடங்களில் வெற்றிபெற்றது.
ஆனால், கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது. அதிபர் மேக்ரானின் என்செம்பிள் கூட்டணி 163 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. விரைவில் கட்சிகளுடன் பேசி புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
Comments