தஞ்சாவூரில் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றவர்கள் மீது மோதிய வாகன விபத்தில் 5 பேர் பலி

0 609

தஞ்சாவூர் மாவட்டம், வளம்பக்குடியில் ஓட்டுநர் கண் அயர்ந்ததால் மினி சரக்கு வாகனம் மோதிய விபத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயில் நோக்கி பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்த 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

கந்தர்வகோட்டை அருகே கன்னுக்குட்டிப்பட்டியை சேர்ந்தவர்கள் திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியுள்ளது.

4 பேர் சம்பவ இடத்திலேயேயும், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றியும் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments