விடுப்பு கோரி வீடியோ வெளியிட்ட காவலர்.. பணி நீக்கம் செய்த டி.ஜி.பி.. ரத்து செய்த நீதிமன்றம்

0 516

விடுமுறை நாட்களில் வேலை பார்த்ததற்கு ஈடுகட்டும் விடுப்பு கோரி முதல்வருக்கு கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்ட காவலரை பணியில் இருந்து நீக்கி டி.ஜி.பி பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான அப்துல் காதர் இப்ராஹிம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் மீது பலமுறை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், விடுப்பு கோரி வீடியோ வெளியிட்டதற்காக பணி நீக்கம் செய்தது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் மனுதாரருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க மதுரை ஆயுதப்படை அதிகாரிக்கு அறிவுறுத்தி, அவரது வயதை கருத்தில் கொண்டு பணி நீக்க உத்தரவை ரத்து செய்வதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments