கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..

0 417

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. 

காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் 18 குழந்தைகள் காயமடைந்தனர்.

பள்ளியின் முன்பாக இறந்த குழந்தைகளின் படங்கள் அடங்கிய பதாகைகள் வைத்து பெற்றோர்கள் கண்ணீர் மல்க மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி, பிடித்த தின்பண்டங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments