நடிகை கௌதமி சொத்து மோசடி புகார் - அழகப்பன் மீண்டும் கைது

0 463

நடிகை கௌதமி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான சொத்துகளை மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கில் ஏற்கனவே கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள அழகப்பன் மீது கெளதமி  காஞ்சிபுரத்தில் ஏற்கனவே அளித்திருந்த  2  புகார்களின் அடிப்படையில் காஞ்சிபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

தனது சொத்துகளை நிர்வகிப்பதற்காகவும், விற்பனை செய்வதற்காகவும் நியமிக்கப்பட்ட அழகப்பனும் அவரது குடும்பத்தினரும் கூட்டாக சேர்ந்து 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரித்ததாக சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை,  காஞ்சிபுரம், இராமநாதபுரம் மாவட்டங்களில் கௌதமி தனித்தனியாக புகார் அளித்திருந்தார்.

இதே போல் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதாக  நடிகை கௌதமி புகார் அளித்துள்ள மாவட்டங்களில் பதியப்பட்ட வழக்குகளிலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments