தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்
தமிழகத்தில் பத்து மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ராணிப்பேட்டை ஆட்சியராக சந்திரகலா, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக அருணா நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்ட ஆட்சியராக லக்ஷ்மி பவ்யா தன்னீரு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக ஆகாஷ், அரியலூர் மாவட்ட ஆட்சியராக ரத்தினசாமி நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியராக சிபி ஆதித்ய செந்தில் குமார், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக அழகுமீனா நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சிம்ரஞ்ஜீத் சிங் கலோன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Comments