தமிழகத்தில் மின்கட்டணம் திடீர் உயர்வு.. எத்தனை யூனிட்டுகளுக்கு எவ்வளவு?...
தமிழகத்தில் மின் கட்டணம் 4.83 சதவீதம் வரை அதிகரிக்கப்படுவதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
வீட்டு பயன்பாட்டுக்கு 100 யூனிட் வரை மின்சார கட்டணம் இல்லை என்ற நிலை தொடரும் என்று அறிவித்துள்ள ஒழுங்குமுறை ஆணையம், 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 4 ரூபாய் 80 காசாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளது.
401 முதல் 500 யூனிட் வரையிலான மின் கட்டணம் 6 ரூபாய் 45 காசாகவும், 501 முதல் 600 யூனிட் வரையிலான கட்டணம் 8 ரூபாய் 55 காசாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
601 முதல் 800 யூனிட் வரை 9 ரூபாய் 65 காசாகவும், 801 முதல் ஆயிரம் யூனிட் வரை 10 ரூபாய் 70 காசாகவும், ஆயிரம் யூனிட்டுகளுக்கு மேல் 10 ரூபாய் 80 காசாகவும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 1-ஆம் தேதி முதல் பயன்படுத்தப்பட்டு வரும் மின்சாரத்துக்கு புதிய கட்டண விகிதம் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டண உயர்வு எவ்வளவு?
100 யூனிட் வரை கட்டணமில்லை
101 - 400 யூனிட் ரூ. 4.60 ரூ. 4.80
401 - 500 யூனிட் ரூ. 6.15 ரூ. 6.45
501 - 600 யூனிட் ரூ. 8.15 ரூ. 8.55
601 - 800 யூனிட் ரூ. 9.20 ரூ. 9.65
801 - 1000 யூனிட் ரூ. 10.20 ரூ. 10.70
1000 யூனிட்டுக்கு மேல் ரூ. 11.25 ரூ. 11.80
Comments