வயிற்று வலி போகணுமா..? மல்லாக்கப் படு..! ஒரே வெட்டு..! வீடியோவால் சிக்கிய கோடாரி பூசாரி.. இளைஞர் வயிற்றில் சிக்கிய கோடாரி..!

0 1834

தீராத வயிற்று வலியை போக்குவதாக கூறி, இளைஞரின் வயிற்றில் கோடாரியால் வெட்டி மஞ்சள் பொடி தூவிய பூசாரியை போலீசார் கைது செய்தனர்...

மூட நம்பிக்கையின் உச்சமான இந்த விபரீத சிகிச்சை சம்பவம் கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் மெட்டாகுட் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.

அங்குள்ள காசிலிங்கேஸ்வரர் கோயி லில் பூசாரி ஆக கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்தவர் 60 வயதான ஜக்கப்பா. கோவிலுக்குப் பின்புறம் உள்ள தனது பண்ணை வீட்டில் இறைவனின் பெயரில் பூசாரி ஜக்கப்பா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக உடலின் பல பகுதிகளில் வலியால் துடிக்கும் பக்தர்களுக்கு வலி இருக்கும் பகுதியில் கோடரியால் பூசாரி தாக்கி அந்த வெட்டுக்காயத்தின் மீது மஞ்சள் தூவி வினோத சிகிச்சை அளித்து வந்துள்ளார். நோய் குணமாகும் என நம்பி பலர் இந்த மூடநம்பிக்கை சிகிச்சையில் பங்கேற்றுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வயிறு வலிப்பதாக பூசாரியிடம் சிகிச்சைக்கு சென்ற ஒரு இளைஞரை தரையில் படுக்க வைத்த பூசாரி அவர் வயிற்றில் கோடாரியை ஓங்கி வெட்டும் போது, கோடாரி வயிற்றில் சிக்கியது. இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மிரண்டு போன பூசாரி அந்த நபரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும், சிகிச்சைக்காக சென்ற அந்த நபரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் தகவல் வெளியானது. பூஜாரியின் கோடாரி வைத்திய வீடியோ வைரலானதால், காவல்துறையினர் பூசாரி மீது மூட நம்பிக்கை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்..

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments