அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

0 403

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் பயன்படும் வகையில் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூரில் தொடங்கி வைத்தார்.

கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறிய பின், அவர்களுடன் உரையாடிக்கொண்டே அவர் உணவருந்தினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 3 ஆயிரத்து 995 பள்ளிகளில் படிக்கும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 மாணவர்கள் கூடுதலாக பயனடைவார்கள் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments