அமெரிக்காவில் வன்முறைச் சம்பவங்களுக்கு இடமில்லை - ஜோ பைடன்

0 417

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு போன்ற வன்முறைச் சம்பவங்களுக்கு இடமில்லை என்றும், மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

பென்சில்வேனியாவில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து எஃப்.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் விசாரித்து வருவதாகவும், அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் நோக்கம் குறித்து எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காமல் மக்கள் அமைதி காக்குப்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

டிரம்ப்புடன் தொலைபேசியில் பேசியதாகவும், அவர் குணமடைந்து வருவதாகவும் பைடன் தெரிவித்தார். டிரம்ப்புக்கான பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்போதைக்கு, மக்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதுதான் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments