செங்கல்பட்டில் பைக் மீது கார் மோதி விபத்து - சிறுவன் பலி

0 503

செங்கல்பட்டில் பைக் மீது பின்னால் வந்த கார் மோதி தூக்கிவீசப்பட்டு, பெற்றோருடன், தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட 5 வயது சிறுவன் உயிரிழந்தான். இதையடுத்து, அவர்களது உறவினர்கள், செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தை முற்றுகையிட்டதோடு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மோசிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முருகன், தனது மனைவி மற்றும் 5 வயது மகனுடன், நேற்று மாலை செங்கல்பட்டு வந்துவிட்டு பைக்கில் வீடு திரும்பியுள்ளனர். செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே வந்போது, பின்னால் வந்த கார் பைக் மீது மோதி, தரதரவென இருசக்கர வாகனத்தை இழுத்துச் சென்று தடுப்புச்சுவர் மீது மோதி நின்றது.

இதில், பைக் அப்பளம்போல் நொறுங்கியது. அப்பா, அம்மா காயங்களுடன் தப்பிக்க, சிறுவன் உடல்நசுங்கி உயிரிழந்தார். இதற்கிடையே, செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள், கைது செய்யப்பட்ட கார் டிரைவரை, தங்களுக்கு காட்டச் சொல்லி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments