பூரி ஜெகந்நாதர் கோயில் புதையல் அறை திறக்கப்பட்டது.. 11 பேர் கொண்ட குழுவினர் அறைக்குள் சென்று ஆய்வு

0 552

ஒடிஷாவில் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் வளாகத்தில் பூட்டிக்கிடந்த ரத்னா பந்தர் எனப்படும் புதையல் அறை திறக்கப்பட்டது.

ஜெகந்நாதரின் விருப்பப்படி 46 ஆண்டுகளுக்குப் பிறகு சிறந்த பயன்பாட்டிற்காக புதையல் அறை திறக்கப்பட்டதாக முதலமைச்சர் மோகன் சரண் மஜி தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.

அறை திறக்கப்பட்டதும் கோயில் நிர்வாகி, பூரி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவினர் உள்ளே சென்றனர்.

புதையல் அறையை பாம்புகள் காவல் காப்பதாக பக்தர்களால் நம்பப்படும் நிலையில், அவை இருந்தால் பாம்பு பிடிப்பவர்களின் உதவி நாடப்படும் என குழுவின் தலைவரான நீதிபதி விஸ்வநாத் ராத் தெரிவித்தார்.

புதையல் அறைக்குள் மன்னர்கால கோயில் நகைகள், பூஜைகளுக்கு தேவையான வெள்ளிப் பொருட்கள் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments