ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவுக்கு கூடுதல் அதிகாரம்
ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், அம்மாநில மறுசீரமைப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது.
அதன்படி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நீதித்துறை, காவல் மற்றும் சிறைத்துறைகளில் அதிகாரிகளை நியமித்தல், இடமாற்றம் செய்தல் ஆகியவற்றில் துணைநிலை ஆளுநரின் அதிகாரங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அட்வகேட்-ஜெனரல், சட்ட அதிகாரிகள் நியமனம், வழக்கு தொடர அனுமதி வழங்குவது அல்லது மறுப்பது, மேல்முறையீடு செய்வது தொடர்பான அரசின் நடவடிக்கைகளுக்கும் ஆளுநரின் ஒப்புதல் அவசியமாகும்.
இந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் சட்டமன்றத் தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்தத் திருத்தங்களால், முதலமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுவிட்டதாக தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
Comments