டொனால்டு டிரம்பின் பிரச்சார கூட்டத்தில் துப்பாக்கி சூடு... வலது காதில் ரத்தக்கறையுடன் காணப்பட்ட டிரம்ப்

0 617

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவரது காதில் காயம் ஏற்பட்டது.

பென்சில்வேனியா மாநிலத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த டிரம்ப் போடியத்தின் பின்புறம் பதுங்கி கொண்டார்.

வலது காதில் ரத்தக்கறையுடன் காணப்பட்ட டிரம்பை, உளவுத்துறை அதிகாரிகள் சூழ்ந்துக்கொண்டு அவரது கவச வாகனத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது டிரம்ப் தனது முஷ்டியை உயர்த்தியபடி, ஆதரவாளர்களை பார்த்து போராடுங்கள்... போராடுங்கள்... என முழக்கமிட்டார்.

துப்பாக்கி சூடு நடத்திய நபரும், கூட்டத்தில் இருந்த ஒருவரும் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தாம் நலமுடன் உள்ளதாகவும், மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுவருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments