12 தொகுதி இடைத்தேர்தலில் ஓங்கிய இண்டியா கூட்டணி 'கை'.. பாஜக 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி

0 609

தமிழகத்தின் விக்கிரவாண்டி தவிர்த்து, 6 மாநிலங்களில் 12 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றன.

இமாச்சல பிரதேசத்தின் தேரா தொகுதியில் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்குர் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற நிலையில் அம்மாநிலத்தின் நலகார் தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இமாச்சலின் ஹமீர்பூர் தொகுதியை பா.ஜ.க. கைப்பற்றியது. மத்திய பிரதேசத்தின் அமரவாரா தொகுதியிலும் பாஜக வெற்றி பெற்றது.

உத்தரகண்டின் பத்ரிநாத் மற்றும் மங்கலார் தொகுதிகளில் ஆளும் பாஜக வேட்பாளர்களை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்கள் வென்றனர்.

மேற்கு வங்கத்தில் தேர்தல் நடந்த 4 தொகுதிகளிலும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வென்றது. பஞ்சாபின் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆளும் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றார். பீகாரின் ரூபாலி தொகுதியில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தை வீழ்த்தி சுயேச்சை வேட்பாளர் வெற்றியை வசமாக்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments