இந்த பாடல்களை எழுதியவருக்கா நிஜத்தில் இப்படி ஒரு சோக முடிவு?.. காற்றில் கலந்த ரோசாப்பூ கவிஞர்..! எழுதிய மொத்த பாட்டும் ஹிட்.. அப்புறம் ?
சூர்யவம்சம் படத்தில் இடம் பெற்ற ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உள்ளிட்ட பல பிரபலமான பாடல்களை எழுதிய சினிமா பாடலாசிரியரும், வருஷமெல்லாம் வசந்தம் படத்தின் இயக்குனருமான ரா. ரவிசங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழ் திரையுலகம் உள்ள வரை நிலைத்திருக்கும் மெலடிப்பாடலான ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ பாடலை எழுதியவர் ரா. ரவிசங்கர்..!
இயக்குனர் விக்ரமனின் உதவி இயக்குனராக திரையுலக வாழ்க்கையை தொடங்கிய ஆரம்ப காலம் தொட்டு ரவிசங்கர், அடுத்தடுத்து எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி, தேவா ஆகியோரது இசையில் எழுதிய அனைத்து பாடல்களுமே ஹிட் ரகம் தான்..!
ரவிசங்கர் எழுதிய பல பாடல்கள் 90ஸ் குழந்தைகளின் அந்த கால காதலுக்கு தாலாட்டாக அமைந்தது
விஜய் நடிப்பில் வெளியான , ப்ரியமுடன், நெஞ்சினிலே படங்களிலும் இவர் எழுதிய காதல் பாடல்கள் ரசிகர்களின் நெஞ்சம் கவர்ந்தவை
சூர்யவம்சம், நீ வருவாய் என, வானத்தை போல, மாயி என ரவிசங்கர் பாடல் எழுதிய படங்கள் வெற்றி அடைந்து பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் சென்று சேர்ந்தது.
ஒரு படம் முழுவதுமாக மொத்தமாக பாடல் எழுதாமல், இரு பாடல்களை மட்டும் எழுதிச்சென்றதால் இவரும் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள முயலவில்லை
இருந்தாலும் ரவிசங்கரின் பாடல் எழுதும் திறமையை பார்த்து, தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி இவருக்கு வருஷமெல்லாம் வசந்தம் என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார்
மனோஜ் நடிப்பில் வெளியான வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் பல இனிமையான பாடல்கள் இடம் பெற்றாலும் படம் பெரிய அளவில் வெற்றிபெறாததால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் சென்னை கே.கே. நகரில் தனியாக வசித்து வந்த ரவிசங்கர் வெள்ளிகிழமை மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திரை உலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது
காலில் வெரிக்கோஸ் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த ரவிசங்கர், “நரம்பு சுற்று நோயால் அவதிப்படுவதாகவும், கடந்த சனவரி மாதமே என்கதையை முடித்து கொள்ள நினைத்தேன், ஆனால் முடியவில்லை, தற்போது என்முடிவை தேடிகொள்கிறேன் மன்னித்துகொள்ளுங்கள்” என உருக்கமாக கடிதம் எழுதிவைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments