ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமண விழா கோலாகலம்... நடிகர்- நடிகைகளின் நடனத்தால் களை கட்டிய திருமண விழா

0 604

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் மற்றும் ராதிகா திருமணம் மும்பையில் கோலகலமாக நடைபெற்றது.

அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் அபிஷேக் பச்சன், ஹிருதிக் ரோஷன், சூர்யா, ராம்சரண், மகேஷ் பாபு உள்ளிட்ட திரைநட்சத்திரங்கள் பலர் பங்கேற்றனர். சல்மான்கான், ஷாருக்கான், ரன்வீர் சிங் ஆகியோர் நிகழ்ச்சியில் உற்சாகமாக நடனமாடினர்.

நடிகைகள் ஜான்வி கபூர், ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். மாதுரி தீட்சித்தின் நடனமும் களைகட்டியது.

பிரிட்டன் முன்னாள் பிரதமர்கள் போரிஸ் ஜான்சன், டோனி பிளேர், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளிட்டோரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

புதுமணத் தம்பதியருக்கு இன்று சுப ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் நிலையில், நாளை திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments