ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம் : குறி தப்பவே கூடாது என தனது கூட்டாளிகளிடம் தெரிவித்த பொன்னை பாலு..? கைதானவர்களிடம் போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை

0 630

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொல்லும்போது ரத்தம் அதிகளவில் வெளியேறும் நரம்புகளை குறிவைத்து வெட்டவேண்டும் எனவும், குறி தப்பவே கூடாது எனவும் பொன்னை பாலு தனது கூட்டாளிகளிடம் தெரிவித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் சிறையில் இருந்த 11 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அதில்  ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய எவ்வளவு பணம் வாங்கப்பட்டது? யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர்? என்பது தொடர்பாக 11 பேரிடமும் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்பட 11 பேரின் 6 மாத வங்கி பரிவர்த்தனை விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் போலி நம்பர் பிளேட்களை பயன்படுத்தியதும், வேறு நபர்களின்பைக்கில் வந்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளதால் அவற்றின் உரிமையாளர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments