தமிழகம் முழுவதும் பல கோயில்களில் வெகு விமர்சையாக நடந்த கும்பாபிஷேகம்.. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வெள்ளேரி கிராமத்தில் சிறிய மலை மீது அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜகிரி வெற்றிவேல் முருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் திருப்பாம்புரம் அருகே வேண்டிய பதவிகள் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படும் திருச்சிறுகுடி மங்களாம்பிகை சமேத சூட்சமபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா 12 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் மானூர் தெக்குபட்டி ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பஜார் வீதியில் பிரசித்தி பெற்ற நடுத்தெரு மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள பொன்னியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Comments