மதமாற்றம் செய்வது உரிமை அல்ல : அலகாபாத் உயர் நீதிமன்றம்

0 469

விருப்பப்பட்ட மதத்தை பின்பற்றும் உரிமையை அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு அளித்துள்ளபோதும், மதமாற்றம் செய்யும் உரிமையாக அதனை எடுத்துக்கொள்ள கூடாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் மஹாராஜ்கஞ் நகரில், கடந்த பிப்ரவரி மாதம் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களை வறுமையில் இருந்து விடுபடலாம் என கூறி மதமாற்றம் செய்ய முயன்றதாக ஸ்ரீனிவாஸ் ராவ் நாயக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரது ஜாமீன் மனுவை நிராகரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால், உத்தர பிரதேசத்தில், 2021 முதல் அமலில் உள்ள சட்டவிரோத மத மாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஆசைகாட்டியோ, வற்புறுத்தியோ, மூளைச் சலவை செய்தோ மதமாற்றம் செய்வது சட்டப்படி குற்றம் என நீதிபதி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments