மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு மாறும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள்..!
தேசிய நெடுஞ்சாலை துறையின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், தமிழகத்தில் முக்கிய நான்கு வழிச் சாலைத் திட்டங்கள் மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி - கன்னியாகுமரி சாலை, ராமநாதபுரம் - ராமேஸ்வரம் - தனுஷ்கோடி சாலை, கோவை - சத்தியமங்கலம் சாலை, சத்தியமங்கலம் - கர்நாடக எல்லை வரை விரிவாக்கப் பணிகள் மற்றும் கூடுதலாக பல புறவழிச் சாலை திட்டங்களும் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இத்திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Comments