காட்டில் நிற்கும் ரெயில்கள்.. சிரிக்கும் பெண்.. அலறும் ஆண்.. கல.. கல..கொலுசு சத்தம்.. திகில் கிளப்பும் ரெயில்வே ஊழியர்..!
தொலைதூரம் செல்லும் ரெயில்கள் சிக்னலுக்காக காட்டுப்பகுதியில் நிற்கும் போது பெண் சிரிக்கும் சத்தம் கொழுசுசத்தம் அல்லது ஆண் அலறும் சத்தம் போன்றவை கேட்கும் என்றும் மன தைரியத்துடன் சரக்கு ரெயில்களில் தனியாக பயணிப்பதாக பெண் ரெயில்வே ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்...
சென்னையில் இருந்து கண் விழித்து பல மணி நேரம் ரயில் ஓட்டும் லோகோ பைலட்டுகளின் உடல், மன நலத்தை காப்பதற்காக ரயில்வே நிர்வாகம் பல யுக்திகளை கையாண்டு வருவகின்றது. அந்தவகையில் அவர்களது உடல் நலத்தை ஒருங்கிணைக்கும் வகையில் மசாஜ், ஓய்வெடுக்க குளிர்சாதன வசதி கொண்ட தனி அறை, நாளிதழ், கேரம் விளையாட்டு என, ரயில் ஓட்டுநர்களின் நலனை காக்க தனி கவனம் செலுத்தி வருகிறது...
சென்னை சென்டரலில் இருந்து ரெயில் ஓட்டிச்செல்லும் போது குறுக்கே ரெண்டு கால் வந்தாலும் சரி, நாலு கால் வந்தாலும் சரி, பயமின்றி ரயில் பயணிகளை பாதுகாப்பாக அழைத்து செல்வதே தலையாய கடமை என்கிறார் ரெயில்வே ஊழியர் தமிழ்செல்வி...
சரக்கு ரெயில்களில் கார்டாக செல்லும் போது , ரெயில் காட்டில் நிறுத்தப்பட்டால் பெண் சிரிக்கும் சத்தம் கொலுசு சத்தம் அல்லது ஆண் அலறும் சத்தம் போன்றவை கேட்கும் என்றும் இரவு நேரங்களில் அடர்ந்த பகுதிகளை கடக்கும் போது, உள்ளுக்குள் பயம் இருந்தாலும், வீட்டை யோசிக்காமல் மன தைரியத்துடன் பணி மேற்கொள்வதாக தெரிவித்தார்..
Comments