சேலம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.15,000 லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ. கைது

0 464

சேலம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தும்பல்பட்டி பெண் கிராம நிர்வாக அலுவலர் பாலாம்பிகாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்து கையும் களவுமாக பிடித்தனர்.

அரவிந்த், அஜித்குமார் சகோதரர்கள் பட்டா பெயர் மாற்றத்திற்காக பாலாம்பிகாவை அணுகியபோது அவர் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில், 15 ஆயிரம் ரூபாய் தருவதாக இருவரும் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர்கள் புகார் அளித்ததையடுத்து, மாறுவேடத்தில் கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை வாங்கும்போது பாலாம்பிகாவை பிடித்து, அவரது கைப்பையிலிருந்து 33 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments