காரின் ஜன்னலில் அமர்ந்து மலைப்பாதையில் ஆபத்தான பயணம்.. கார்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்த போலீஸ்

0 584

புதுச்சேரி மற்றும் ஆந்திரா பதிவெண் கொண்ட 3 கார்களில் கேரள மாநிலம் மூணாருக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் சிலர், மலைப் பாதையில் காரின் ஜன்னலில் அமர்ந்தும், ஃசெல்பி எடுத்தும் ஆபத்தான முறையில் பயணித்த வீடியோ வலைதளங்களில் வெளியானது .

இதனை அடுத்து ஆந்திரா மற்றும் புதுச்சேரி பதிவெண் கொண்ட 2 வாகனங்களை பறிமுதல் செய்த கேரள போக்குவரத்து போலீசார், அதன் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதித்தனர்.

புதுச்சேரி பதிவெண் கொண்ட மற்றொரு வாகனத்தை தேடி வருவதாக, கேரள போலீசார் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments