போக்குவரத்து வசதியில்லாத மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தும் நடவடிக்கைகளை துவங்கியது சீனா
போக்குவரத்து வசதியில்லாத மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தும் நடவடிக்கைகளை சீனா துவங்கியுள்ளது.
அந்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள சிஷுவான் மாகாணத்தின் அபுலுவோஹா என்ற சிறு கிராமத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்க 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு மலைப் பாதை அமைத்து போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, சிஷுவான் மாகாணத்தின் தலைநகர் செங்டுவில் இருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு ரயில் போக்குவரத்தும் துவக்கப்பட்டுள்ளது.
சிஷுவான் மாகாணத்தில் ஒருங்கிணைந்த போக்குவரத்து நெட் வொர்க்கின் நீளம் 4 லட்சத்து 30 ஆயிரம் கிலோ மீட்டர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments