உத்தர பிரதேசத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு திரௌபதி முர்மு இரங்கல்... பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம்

0 651

உத்தர பிரதேசத்தில் சாலை விபத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருத்தமும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்கள் குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகை வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உன்னாவ் மாவட்டத்தில் லக்னோ - ஆக்ரா விரைவுச் சாலையில் பால் கண்டெய்னர் மீது டபுள் டெக்கர் பேருந்து மோதியதில் 18 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments