காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் மேட்டூர் அணைக்காக நீர்வரத்து விநாடிக்கு 4,521 கனஅடியாக அதிகரிப்பு

0 354

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, விநாடிக்கு 3 ஆயிரத்து 341 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 4 ஆயிரத்து 521 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 41 புள்ளி 15 அடியாக உள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 12 புள்ளி 69 டி.எம்.சி.யாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments