ஊர்கூடி ஒப்பாரி ஆக்டிங் பெண்ணின் சடலத்தை கைப்பற்றியது போலீஸ்..! விசாரணை வளையத்தில் கணவன் வீட்டார்

0 1011

திருச்சி திருவெறும்பூர் அருகே மர்மமாக உயிரிழந்த பெண்ணை, இயற்கை மரணம் என்று அடக்கம் செய்ய முயன்ற கணவன் வீட்டாரிடம் இருந்து பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாமனார் மாமியாருடன் சேர்ந்து கணவன் அடித்து கொலை செய்து விட்டதாக கூறி பெண் வீட்டார் புகார் தெரிவித்தனர்

27 வயது பெண் ஒருவர் இயற்கையாக மரணம் அடைந்ததாக கூறி... வீட்டு முன்பு சடலத்தை வைத்து ஊர் கூடி ஒப்பாரி வைத்த கணவனின் உறவினர்களை போலீசார் விரட்டிய காட்சிகள் தான் இவை..!

திருச்சி - புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள லட்சுமணன் பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவருக்கும் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி நடுக்காவேரியை சேர்ந்த அருள் ஹேமா என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த அருள் ஹேமா திடீரென நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக கூறி கணவன் வீட்டார் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக , பெண் வீட்டாருக்கு தகவல் கிடைத்தது.
பெண் வீட்டார் விரைந்து வந்து பார்த்தபோது அருள் ஹேமாவை ப்ரீசர் பாக்ஸ்சில் வைத்து இறுதி சடங்கிற்கு தயார் செய்து கொண்டிருந்தனர்.

அருள் ஹேமாவின் உடம்பில் காயம் இருப்பதாகவும் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் கூறிய உறவினர்கள் , அருள் ஹேமாவின் உடலை அடக்கம் செய்யக்கூடாது என தடுத்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

இது குறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தவர்களை விரட்டி விட்டு, பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அருள் ஹேமாவை அடித்து கொலை செய்து விட்டு இயற்கை மரணம் அடைந்தது போல் நாடகமாடுகின்றனர் என்றும் அவரது இறப்பிற்கு காரணமான கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை கைது செய்ய வேண்டும்
என பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர்.

அருள் ஹேமா உடலில் காயங்கள் இருப்பதால் உயிரிழப்பின் பின்னணி குறித்து போலீசார் கணவன் வீட்டாரிடம் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments