இந்தியா-ரஷ்யா இடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்து... இருநாடுகளின் கூட்டு முதலீட்டுத் திட்டங்களுக்கும் ஒப்புதல்
பிரதமர் மோடியின் ரஷ்யப் பயணத்தை முன்னிட்டு, இந்தியா ரஷ்யா இடையே 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இருநாடுகளின் கூட்டு முதலீட்டுத் திட்டமும் ஒப்பந்தமாகி உள்ளது.
வர்த்தகம், பருவநிலை மாற்றம், ஆர்க்ட்டிக், அன்டார்டிக் கடல் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் இருநாடுகளிடையே கையெழுத்தாகியுள்ளன.இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் கட்டுக்குள் இருக்க கச்சா எண்ணெய் விலையைக் குறைத்து வழங்கிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இதனிடையே ரஷ்ய ராணுவத்தில் இணைக்கப்பட்ட 40 இந்தியர்களையும் உடனடியாக விடுவிக்க ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது.உக்ரைன் போரில் உயிரிழந்த இந்தியர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் புதின் அரசு உறுதியளித்துள்ளது.
Comments