பிரான்ஸ் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மையில்லை.. புதிய பிரதமராகப் போவது யார்?
பிரான்ஸ் நாட்டில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின் படி இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
அங்கு ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 577 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இந்த தேர்தலில் 289 இடங்களை பெறுகின்ற கூட்டணி, ஆட்சி அமைக்கும்.
இடதுசாரி கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை பெற்று இருந்தாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை அந்தக் கூட்டணியால் பெற முடியாது என தெரிகிறது.
இரண்டாம் இடத்தில் அதிபர் இமானுவேல் மேக்ரான் அங்கம் வகிக்கும் மையவாத கூட்டணி மற்றும் மூன்றாம் இடத்தில் வலதுசாரிகளும் உள்ளனர்.
இத்தகைய சூழலால் அதிபர் மேக்ரான் தனது கொள்கைகளுக்கு எதிரான புதிய பிரதமருடன் பணியாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளார்.
Comments