சிவகாசியில் ரசாயன கலவை தயாரிக்கும்போது வெடி விபத்தில் 2 பேர் பலி
சிவகாசியை அடுத்த காளையார் குறிச்சியில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் நேர்ந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். தொழிலாளர்கள் 4 பேர், ஒரே அறையில் ரசாயன கலவை தயாரித்துகொண்டிருந்தபோது, கை தவறி கலவை கீழே விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
இதில், அறை தரைமட்டமாகி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 2 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். விபத்து நடந்த ஆலையில் ஆய்வு செய்த சார் ஆட்சியர் பிரியா, ரசாயன மூலப்பொருட்களை முறையாக கையாளாததே விபத்திற்கு காரணம் என்று தெரிவித்தார்.
Comments