புதுச்சேரியில் சாராயம் குடித்த 4 பேருக்கு லேசான வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நேற்று இரவு பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், ராஜா, சுரேஷ்பாபு மற்றும் பிரகாஷ் ஆகியோர் புதுச்சேரி மதகடிப்பட்டில் சாராயம் அருந்திவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
சாராயம் குடித்த சில மணி நேரத்தில் நால்வருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Comments