தாளவாடி வனப்பகுதியிலிருந்து விவசாய நிலங்களில் புகுந்த காட்டு யானைகள்

0 317

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ராமாபுரம் கிராமத்தில் விவசாய நிலங்களில் இன்று அதிகாலை புகுந்த 4 காட்டு யானைகள் கரும்பு பயிர்களை சேதப்படுத்தின.

சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் கரும்புப் பயிர் சேதமடைந்ததாக கூறப்படும் நிலையில் கிராம மக்களும், வனத்துறையினரும் பலத்த ஒலி எழுப்பி யானைகளை விரட்டினர்.

தாளவாடி வனப்பகுதியில் இருந்து யானைகள் அடிக்கடி வெளியேறி பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments