கன்டெய்னர் வழங்குவதாகக் கூறி மோசடி: ஒருவர் கைது
தூத்துக்குடியில், கப்பல் மூலமாக பொருட்களை ஏற்றுமதி செய்யும் கன்டெய்னரை குறைந்த விலைக்கு புக் செய்துத் தருவதாகக் கூறி 38 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மில்லர் புரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் மணிகண்டனை கோவையைச் சேர்ந்த ரபீக் என்பவர் சந்தித்து மார்க்கெட் விலையை விட குறைத்து கண்டெய்னர் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
வெள்ளரிக்காய் ஏற்றுமதிக்காக 16 கண்டெய்னர் புக் செய்து அதற்கான பணத்தை வழங்கிய நிலையில், 6 கண்டெய்னர் மட்டுமே வழங்கியதாக கூறப்படுகிறது.
Comments