பார்முலா ஒன் கார் பந்தயத்தை மையப்படுத்தி 'எஃப்1' திரைப்படம் தயாரிப்பு

0 1297

பார்முலா ஒன் கார் பந்தயத்தை மையப்படுத்தி ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படத்திற்கு எஃப் 1 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான டாப் கன் மேவ்ரிக் சினிமாவை இயக்கிய ஜோசப் கொசின்ஸ்கி  எஃப் 1 திரைப்படத்தை இயக்கியுள்ளார்

அடுத்த ஆண்டு ஜுன் மாதம் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட உள்ள எஃப் 1 திரைப்படத்தை ரேஸ் கார் ஓட்டுனர்களின் ஒத்துழைப்புடன் தயாரித்துள்ளனர்.

பார்முலா ஒன் உலக சாம்பியன் லூயிஸ் ஹாமில்டன் ஒத்துழைப்புடன் நடிகர் பிராட் பிட் நடித்த காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவில் கார் பந்தய காட்சிகளை படம்பிடித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments