மும்பையில் விடிய விடிய பெய்த பெருமழையால் விமானம், ரயில் மற்றும் சாலைகள் என ஒட்டுமொத்த போக்குவரத்தும் முடங்கின
மும்பையில் விடிய விடிய பெய்த பெருமழையால் விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டன. கனமழையால் இரவு 2.20 மணி முதல் 3.40 மணி வரை 27 விமானங்கள் தரையிறங்க முடியாமல், அகமதாபாத், இந்தூர், ஐதராபாத் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
இரவு 1 மணியில் இருந்து காலை 7 மணிக்குள் 30 சென்டி மீட்டர் மழை பெய்ததால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளக்காடாகின. ரயில் பாதைகளில் வெள்ளம் புகுந்ததால் புறநகர் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. நீண்ட தூர ரயில்கள் காலை முதல் மெதுவாக இயக்கப்படுகின்றன.
சாலைகளில் வெள்ளம் சூழ்ந்திருந்ததால் மும்பை நகரப் பேருந்துகளை இயக்கும் பி.இ.எஸ்.டி. நிறுவனம், பேருந்து போக்குவரத்தை நிறுத்தியது. வாகனங்களை இயக்க முடியாத அளவு சாலைகளிலும் சுரங்கப்பாதைகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் போக்குவரத்தும் முடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மும்பையில் மிதமானது முதல் கனமழை வரை தொடரக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Comments