கும்பகோணத்தில் பேருந்தை முந்திச்செல்ல முயன்ற கார், இருசக்கர வாகனம் மீது மோதல்

0 366

கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் அதிகாலையில் பேருந்தை முந்திச் சென்ற கார், எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மின்னல் வேகத்தில் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தின் முன்சக்கரம் கழன்று ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் ஹெல்மெட் அணிந்து இருந்த தால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். காரை பெண் ஒருவர் ஓட்டி வந்ததும் , இடதுபுறம் செல்வதற்கு பதிலாக அவர், வலது புறம் தவறான பாதையில் காரை ஓட்டிச் சென்றதுமே விபத்துக்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments