ஸ்ரீவைகுண்டத்தில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்கள் போராட்டம்... அரசின் முதல் தவணை பணம் கூட கிடைக்கவில்லை என புகார்

0 319

ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகட்ட அனுமதி வழங்கிவிட்டு முதல் தவணை பணத்தை கூட விடுவிக்கவில்லை எனக் கூறி ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

30 ஊராட்சிகளில் சேதமடைந்த ஆயிரத்து 320 வீடுகளுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, பலர் பணிகளை தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

இதுவரை முதல் தவணை பணம் கூட வரவில்லை எனக் கூறி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் நெல்லை - திருச்செந்தூர் சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments