பொத்தூரில் புத்தமதப்படி ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம்.... ஜெய்பீம் என்ற முழக்கத்துடன் இறுதிமரியாதை செலுத்திய ஆதரவாளர்கள்....

0 486

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் நீதிமன்ற உத்தரவின் படி செங்குன்றம் அருகே உள்ள பொத்தூரில் புத்தமதப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்யப்பட்டது.

உறவினர்கள் இறுதிமரியாதை செலுத்திய போது திரளான தொண்டர்கள் ஜெய்பீம் என முழங்கினர்.

சென்னை பெரம்பூரில் கடந்த வெள்ளியன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அங்கிருந்து வாகனத்தில் ஊர்வலமாக பொத்தூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

21 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க ஊர்வலம் 7மணி நேரத்தை எடுத்துக் கொண்ட நிலையில் வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி வழியனுப்பினர்.

தொல்.திருமாவளவன், செல்வப்பெருந்தகை, ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments