கோவை மாநகராட்சி புதிய மேயர் யார்..? மண்டல தலைவர்கள், கவுன்சிலர்களிடையே கடும் போட்டி..

0 373


இன்று நடைபெறும் கோவை மாநகராட்சி கூட்டத்தில், புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதால் புதிய மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதல் பெண் மேயராக இருந்த தி.மு.கவைச் சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் கடந்த 3 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

எனவே, புதிய மேயருக்கான போட்டியில், மண்டல தலைவர்களாக உள்ள இலக்குமி இளஞ்செல்வி, மீனா லோகு மற்றும் பல்வேறு குழுக்களின் தலைவர்களும் ஆயத்தமாகி உள்ளனர்.

 

நெல்லை மாநகராட்சி மேயர் பதவியில் இருந்து தி.மு.கவைச் சேர்ந்த சரவணன் விலகிய நிலையில், மாநகராட்சியின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், மேயரின் விலகல் கடிதம் ஏற்கப்பட்டு புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments