சாலையில் சிதறிய 500 ரூபாய் நோட்டுகளை அள்ளிய பொதுமக்கள்.. வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததா? வீசப்பட்டதா?
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி - தேனி சாலையில் மாமரத்துப்பட்டி விலக்கு பகுதியில், தேனியில் இருந்து மதுரை சென்ற வாகனத்தில் இருந்து சிதறிய 500 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.
சாலையில் சிதறிய பணம் குறித்து இதுவரை புகார் ஏதும் வராத நிலையில், எந்த வாகனத்தில் இருந்து பணம் விழுந்தது? அல்லது வீசப்பட்டதா என்பது குறித்து சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments