ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி?

0 1026

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கு ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரம் காரணமாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

ஆருத்ரா கோல்டு பண மோசடியில் பாதிக்கப்பட்ட சிலருக்கு, பணத்தை ஆம்ஸ்ட்ராங் மீட்டுக்  கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஆருத்ரா நிதி நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷ்,  ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவரது ஆதரவாளர் ஜெயபாலை மிரட்டியதாகவும், குறிப்பாக ஜெயபாலை கேலி செய்யும் விதமாகவும், ஆபாசமாக பேசியது தெரியவந்தது.

ஆத்திரமடைந்த ஜெயபால் கூட்டாளிகளோடு சேர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்டில்  பட்டினப்பாக்கத்தில் ஆற்காடு சுரேஷை கொலை செய்தததாக கூறப்படுகிறது.

ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிதீர்க்கவே ஆம்ஸ்ட்ராங்கை  கொன்றதாக ஆற்காடு சுரேஷ் தம்பி பாலு உள்பட 8 பேர் போலீசில் சரணடைந்தனர்.

ஆற்காடு சுரேஷ் கூட்டாளிகள் பின்தொடர்வது தொடர்பாக ரவுடிகளை கண்காணிக்கும்  நுண்ணறிவு பிரிவு போலீஸ் மூன்று முறை எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments