3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்
புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழங்கறிஞர்கள் சங்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வாயில் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில, போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு வழக்கறிஞர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு நீதிமன்றம் முன்பாக திரண்ட வழக்கறிஞர்கள், மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டபடி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பழைய சட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரி வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர்.
காஞ்சிபுரம் முதன்மை நீதிமன்ற நுழைவு வாயில் முன்பாக வழக்கறிஞர்கள் ஏராளமானோர் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பாக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Comments