மூதாட்டியிடம் நகை பறிப்பு - பணிப்பெண் கைது

0 364

நெல்லையில் 84 வயது மூதாட்டியை தாக்கி, நகைகளை பறித்து செல்ல முயன்ற பணிப்பெண்ணை அக்கம்பக்கத்தினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வீட்டில் தனியாக வசித்துவரும் ருக்மணி என்ற மூதாட்டியை பகலில் கவனித்துக்கொள்வதற்காக கனகரத்தினம் என்ற பெண்ணை அவரது மகன் நியமித்துள்ளார்.

வேலையில் சேர்ந்து 4 நாட்களே ஆன நிலையில், கணகரத்தினம் பணி முடித்து வீட்டிற்கு செல்லும்போது மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த 2 தங்க செயின்களையும், கமலையும் பறித்ததுகொண்டு ஓட முயன்றதாக கூறப்படுகிறது.

காது மடல்கள் கிழிந்து ரத்தம் வழிய வலியால் துடித்த மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தப்பியோடிய பணிப்பெண்ணை துரத்தி சென்று பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments