ஹெஸ்பொல்லா தளபதியை வான் தாக்குதல் நடத்தி கொன்றது இஸ்ரேல்

0 626

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்பொல்லா அமைப்பின் மூத்த தளபதி முகமது நாசரின் உடல் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த புதன்கிழமை காரில் சென்றுகொண்டிருந்த முகமது நாசரை இஸ்ரேல் விமானங்கள் ஏவுகணை வீசி கொன்றன.

அவரது மரணத்துக்கு பழிவாங்கும் விதமாக இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்களையும், டிரோன்களையும் வீசி ஹெஸ்பொல்லா போராளிகள் தாக்குதல் நடத்தினர்.

அவை அனைத்தும் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments