20 ஓவர் உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் மோடி சந்திப்பு

0 512

20 ஓவர் உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியனானது.

புயல் காரணமாக வீரர்கள் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தனர்.

விமான நிலையத்தில் வீரர்களுக்கு ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

பின்னர் நட்சத்திர விடுதிக்கு சென்ற வீரர்கள், நடனக் கலைஞர்களுடன் உற்சாகமாக நடனமாடினர்.

இதனைத் தொடர்ந்து அணி வீரர்கள் அனைவரும் பிரதமர் மோடியை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேரில் சந்தித்தனர்.

உலகக்கோப்பையை வென்றது குறித்து வீரர்கள் தங்களது அனுபவங்களை பிரதருடன் பகிர்ந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments