மயிலாடுதுறை அருகே வி.சி.க.வை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் வெட்டி கொலை போலீசார் விசாரணை

0 354

மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரை வெட்டி கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நடராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேஷ் நேற்று இரவு மயிலாடுதுறை செல்லக்கூடிய பிரதான சாலையில் டூவீலரில் வந்து கொண்டிருந்தபோது சிலர் அவரை வழிமறித்து அரிவாளால் தலை மற்றும் உடல் பகுதிகளில் வெட்டியதாக கூறப்படுகிறது.

படுகாயமடைந்து அவர் அங்கேயே உயிரிழந்த நிலையில், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜேஷ் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments