அ.தி.மு.க. பகுதிச் செயலாளர் சண்முகம் கொலையில் தி.மு.க. கவுன்சிலரின் கணவர் உட்பட 9 பேர் கைது ; 3 பேருக்கு வலை

0 423

சேலம் கொண்டலாம்பட்டி அ.தி.மு.க. பகுதிச் செயலாளர் சண்முகம் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தி.மு.க. கவுன்சிலரின் கணவர் உட்பட 9 பேர் கைது செய்யப் பட்டனர்.

முன்னதாக, தாதகாப்பட்டியில் புதனன்று சண்முகத்தை வெட்டிக் கொன்ற குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் திரண்டதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதனிடையே, எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரு விளக்குகளை துண்டித்தும், சிசிடிவி கேமராக்களை உடைத்தும் திட்டமிட்டு கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும், அதில் தொடர்புடையவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments