தஞ்சை - கும்பகோணத்தில் ரூ.78 கோடியில் போடப்பட்ட தார்ச்சாலையில் சேதம்

0 484

தஞ்சாவூரில் இருந்து அணைக்கரை வரை 48 கிலோ மீட்டர் தூரத்துக்கு 78 கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட தார்ச்சாலை ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், ஆங்காங்கே பெயர்ந்து விரிசல் விட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதனால், இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அய்யம்பேட்டை, வழுத்தூர், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் விரிசல் விட்டு சாலை பெருமளவில் சிதிலமடைந்துள்ளதாகவும், விரைந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments